விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த கனமழையால் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதற்காக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து முன்னணி அமைப்பினரால், தேவையான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. விழுப்புரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கத்தில் உணவு தயாரிக்கப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களுக்கு அதன் பொறுப்பாளர்கள் மூலம் அவை வழங்கப்பட்டு வருகிறது.