களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் படையெடுத்தனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சில ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருட்களை பயன்படுத்தும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு இயற்கை விவசாயமே தீர்வு என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை சாத்தியமாக்கும் முயற்சியாகத்தான் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சி.

கோவை ‘கொடிசியா’ அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கொடிசியா ஏ, பி அரங்குகளில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஸ்டால்கள் இடம்பெற்றன.

இயற்கை வேளாண் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை சுகந்தி என்ற பெண் தொழில் முனைவோர் உருவாக்கினார். “நாங்கள் தயாரிக்கும் வாழை நார் பொருட்களுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வாழை மட்டை நாரில் செய்யப்பட்ட எங்களது மாலையை பிரதமர் ஏற்றுகொண்டார்” எனக் கூறும் சுகந்தி, இது எங்களின் இத்தனை நாள் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதுதவிர பாரம்பரிய நெல் வகைகளை ஒரே இடத்தில் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியது இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட நெல் வகைகள்…. இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனால் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன…

இயற்கை வேளாண் விவசாயத்தின் அடிப்படையே மண்தான்…. அந்த மண்ணை வளமாக்க ஒவ்வொரு குடிமகனும் தமது வீட்டில் குப்பைகளை உரமாக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்…. என்கிறார் மக்கும் குப்பைகளை உரமாக்கும் நடைமுறைகளை கேரளாவில் சாத்தியமாக்கி வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நான்சி… இவர் இந்த இயற்கை வேளாண் கண்காட்சியில் ஸ்டால் அமைத்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

கரும்பு, வாழை, காய்கறிகள், பயிர் வகைகள், உரங்கள், மண்ணை உயிர்ப்போடு வைக்கும் இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள் என இயற்கை வேளாண்மைக்கு உதவும் பல காரணிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. மருந்து தெளிக்க, நீர் பாய்ச்ச, பூச்சி கொல்லி தெளிக்க அதிக திறன் கொண்ட ட்ரோன், கால்நடை, மீன் வளர்ப்புகளுக்கு உதவும் தொழில் நுட்ப கருவிகள் என கண்காட்சியில் இடம்பெற்ற தொழில் நுட்ப கருவிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.

உணவை சரியானதாக உண்ணும் போது அதுவே மருந்தாக செயல்படுகிறது… ஆனால் ரசாயனம் கலந்த பூச்சி கொல்லி உரங்களால் உணவே நாளடைவில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணியாக மாறி விடுகிறது. இந்த நிலையில்தான் இயற்கை வேளாண்மைக்கு மாறி, எதிர்கால தலைமுறைக்கு நல்ல உணவை சாத்தியப்படுத்த நம் விவசாயிகள் தயாராகி விட்டனர் என்பதையே இந்தக் கண்காட்சி பறைசாற்றியது.

Tags: Kodisia Hallorganic farming conferenceNel Jayaraman...prime minister narendra modicoimbatorefarming exhibition
Share
Tweet
SendShare
Previous Post

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Next Post

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies