அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 07:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாக துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் கடிதம் எழுதியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தியும் காலம் தாழ்த்தி வந்த தமிழக காவல்துறை, விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தது. இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் பணி நியமனங்கள் மற்றும் மாறுதல்களுக்கு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

அதில், பணி நியமனம் மற்றும் மாறுதலுக்கு ஏழு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, சுமார் 340 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் பணிநியமன விவரங்கள் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கே.என்.நேருவுக்கு தொடர்புடைய கவி பிரசாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்ணன் ஆகியோரிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, லஞ்ச பணமான 365 கோடி ரூபாய் எந்தெந்த வழிகளில் செலவு செய்யப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளது.

இந்த பணம் ஹவாலா நெட்வொர்க் மூலமாக வெளிநாடுகளுக்கும் கைமாறியுள்ளதையும், சுமார் 223 கோடி அளவுக்கு கட்டுமானத்திலும், 3 கோடிக்கு சொத்துக்கள், இரண்டரை கோடிக்கு தங்கக் கட்டிகள் வாங்கி சேர்த்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

குறிப்பாக இந்த லஞ்சப் பணத்தில் திமுகவுக்கு வளர்ச்சி நிதியாக 10 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Enforcement Directoratetamil Nadu DGPMinister K.N. Nehrumunicipal administration department.
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் – பிரதமர் மோடி

Next Post

திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies