டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் நோக்கி காங்கிரஸ் தலைவர்களுடன் பேரணியாக புறப்பட்டார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணிக்கு முன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து ஜிதேந்திர சிங் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், பிரதமர் இல்லம் நோக்கி பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதைக் கண்டித்து ராகுல் காந்தி தரையில் படுத்து முழக்கமிட்டதால் அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இதேபோல டெல்லி கல்யாண் மார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
















