திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் - எல். முருகன் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மோசடி நாடகம் நடத்துகிறார் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது.

நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திய பிறகும் திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதா?   திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில் மகா தீபம் ஏற்றும் விவகாரத்தில் தொடக்கம் முதலே மோசடி நாடகம் நடத்தி இந்துக்கள் முதுகில் குத்தியதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும், திமுகவும் தான்.   திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் நீண்டகால ஏக்கம்.

இதற்காக இந்துக்கள் நடத்திய போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது..   பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு டிசம்பர் 3-ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற திடமான எண்ணம் கொண்ட திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை செயல் அலுவலரை வைத்து மேல் முறையீடு செய்தது. தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற முடிவை எடுத்தது செயல் அலுவலரா? அவர் வெறும் அம்பு மட்டுமே.

எய்தது யார்? பின்னால் இருப்பது இந்து விரோத எண்ணம் கொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான திரு. மு. க. ஸ்டாலின் தான். அதே சமயம் இந்து விரோத அறநிலையத்துறை வைத்து தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக முதலமைச்சர் நாடகம் நடத்தியுள்ளார். காலையில் இந்துக்கள் நீதிமன்றத்தை அணுகிய போது மாலை 6 மணி வரை நேரம் இருக்கிறதே என அப்போது அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக  அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர் ஏதும் பேசவில்லை. ஆனால், குயுக்தியுடன் தனது கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு இந்துக்களின் நம்பிக்கையை கேவலமாக விமர்சிக்க வைத்தார். அதோடு, நீதிபதி பற்றியும் தகாத முறையில் அவர்கள் பேசினர். இறுதியாக, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் எப்படியும் மகாதீபம் ஏற்ற விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்து விரோத திமுக அரசு கடைசி வரை மகாதீபம் ஏற்றவில்லை.

பின்னர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்காமல் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தியது. வழக்கை மீண்டும் நீதிமன்றம் கொண்டு சென்று தாமதம் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டை முதலமைச்சர் செய்கிறார்.

இந்துக்களின் பணத்தை சுரண்டி கொள்ளையடிக்கவும் ஆன்மீக நம்பிக்கையை தகர்க்கவுமே திமுக ஆட்சியில் அறநிலையத்துறை செயல்படுகிறது. மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை தொடர்ந்த மேல் முறையீடு மனுவினை  இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து நியாயத்தை உறுதி செய்துள்ளது என்று எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், இந்து விரோத போக்கு கொண்ட திமுக அரசிற்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L MuruganDMKMK StalinThe Chief Minister's fraudulent drama in the Thiruparankundram issue - L. Murugan alleges
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

Next Post

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies