எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக - சிறப்பு தொகுப்பு!
Jun 6, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 21, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலி சேர்கள், பேசுவதற்கு முன்பாகவே கலைந்து செல்லும் கூட்டம் என சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் பிசுபிசுத்து போயிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் கூட்டம் வராததன் பின்னணியில் ஐந்தாண்டு கால திமுக ஆட்சி மீதான அதிருப்தியே காரணம் என கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தின் மூலை முடுக்குகளெங்கும் தீவிரமடைந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி வரை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

மறுபுறம் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆளுக்கு ஒருபக்கம் பிரித்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தை முதல் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு வரை குழப்பத்திலேயே நகரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வேறுவழியின்றி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் வந்தாலும் ஓடோடி சென்று சந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய ஆரூயிர் சகோதரரான ராகுல்காந்தியை சந்திக்க மறுத்திருப்பதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடியாகத்தான் இருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் ராகுல்காந்தி வரவில்லை என்றால் என்ன நான் இருக்கிறேன் எனக்கூறி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு வாக்காளர்களும், பொதுமக்களும் இணைந்து மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். திமுகவின் பிரச்சாரம் என்றால் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்ற மாயபிம்பம் ஸ்டாலினின் பிரச்சாரத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களையும், நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத ஸ்டாலின், அதற்கு மாறாக மத்திய அரசையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் குற்றம் சாட்டியே வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அதோடு செல்லும் இடங்கள் அனைத்திலும் தற்புகழ் பாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் ஸ்டாலினின் உரை மீது மக்களின் மீது ஒருவித அயற்சியும் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடங்கள், பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் காலி இருக்கைகள் அதிகளவில் இருப்பதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக ஸ்டாலின் பேசிக் கொண்டே இருக்கும் போதே பொதுமக்கள் கலைந்து செல்லும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் திமுக வெளியிடும் விளம்பரங்களை விட வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியை பார்த்து ஸ்டாலின் தொடங்கிய ரோடு ஷோவும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. அதோடு சாலைகளில் நடந்து சென்று மக்களோடு மக்களாக வாக்குகள் சேகரிக்கிறோம் எனும் நாடகத்தில் மனு கொடுக்க வரும் மக்களை ஸ்டாலின் நடத்தும் விதமே அவரின் உண்மையான முகத்தை வெளிக்காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக கட்டமைத்த மொத்த பிம்பமும் கடந்த ஐந்து நாட்களில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் மூலம் சுக்குநூறாக உடைந்துவிட்டதாக திமுகவின் சக தலைவர்களே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மற்றொரு கவனிக்க கூடிய தலைவராக உருவெடுத்திருப்பவர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தான். திமுக தலைவர் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக கூறியிருப்பதன் மூலம் பிரேமலதா விஜயகாந்த் தான் உண்மையான லேடி துரேந்தர் எனும் பெயரை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதனை செய்ய மறுத்த திமுகவின் வேட்பாளரை அருகில் வைத்துக் கொண்டே தீபம் ஏற்றுவோம் என பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்திருப்பது தேமுதிக உண்மையாகவே திமுக கூட்டணியில் தான் உள்ளதா என்ற சந்தேகத்தை அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், எந்த சமூக வலைத்தளங்களை திறந்தாலும் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற விளம்பரம் தான் ஓடுகிறது என்றாலும் தமிழக மக்களை பொறுத்த வரையில் ஸ்டாலின் முடியட்டும், தமிழ்நாடு விடியட்டும் என்ற குரல் தான் பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Tags: aiadmktvkTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026stalin campaginAssembly Elections Tamil Nadutamil nadu assembly election 20262026 tamil nadu assembly nadu election trendsbjptamil nadu election updateDMKpremalatha
ShareTweetSendShare
Previous Post

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

Next Post

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Related News

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

‘நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies