ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது! : அண்ணாமலை கடும் கண்டனம்!
Jul 20, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது! : அண்ணாமலை கடும் கண்டனம்!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கோயில்களில் சிறப்பு பூஜைகளை தடுக்கும் தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாக தெரிவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,

நாளைய தினம்  அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை  வரவேற்கின்றனர்.

பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப்  பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மத சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது  என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு?

மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி,  அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக்  கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamil nadu govttamilnadu templestamil nadu bjp presidentPM ModibjpannamalaiDMK government
ShareTweetSendShare
Previous Post

மக்களிடையே அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் பெருக அண்ணாமலை பிரார்த்தனை!

Next Post

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Related News

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies