Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” - அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!
Sep 28, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2026, 09:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடிச்சி விடுவோம், நமக்கென்ன” என்று table செய்யப்படாத Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான பதிவில், அவர்களே! ஏற்கனவே இரண்டு கட்சிகளில் டோக்கன் போட்டு விட்டு மூன்றாவதாக தவெக-வில் இணைந்து, வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்தவன் மாளிகை வாசலை அடைந்தது போல் இன்று அமைச்சரான நீங்கள், தமிழக சட்டமன்றத்திலேயே மூத்த உறுப்பினராக திகழும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்  போஜராஜன் அவர்களை பார்த்து “உங்கள் குரல் தமிழகத்திற்கு கேட்காது” என்று பேசியது உங்கள் ஆணவத்தை மட்டுமே காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, தொகுதி மறுவரையறை பற்றி நீங்கள் தெரிவித்த அனைத்து விஷயங்களும் பொய்யானவை! முன்னுக்குப் பின் முரணானவை என்பதற்கான சான்றுகள் இதோ: 1. அனைத்து மாநிலங்களிலும் தற்போதுள்ள பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்படும் என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா  அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த Formula-வின் அடிப்படையில், தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-இலிருந்து 59-ஆக உயரப் போகிறது.என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பால், விகிதாச்சார அடிப்படையில் பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18% இல் இருந்து 7.23% ஆக உயரப்போகிறது. இதில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?

3. அடுத்ததாக, இதன் மூலம் “வடமாநிலங்கள் மட்டுமே பயனடைகின்றன” என்று கூறுகிறீர்களே, உண்மையிலேயே மத்திய பாஜகவின் அரசுக்கு அதுதான் நோக்கம் என்றால், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 140 தொகுதிகள் கிடைக்கக் கூடிய 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை நேரடியாக அமல்படுத்தியிருப்பார்கள்.

4. ஆனால், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நேர்மையான நோக்கத்தில், ‘uniform 50% increase model’-இன் மூலம் தமிழகத்திற்கு மேலும் 20 MP-க்கள் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்துள்ளது மத்திய பாஜக அரசு. இதனை நீங்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பது உங்களின் காழ்ப்புணர்ச்சியைத் தான் காட்டுகிறது.

5. பின்பு உங்கள் அறியாமைக்கு அமெரிக்காவை துணைக்கு இழுக்கிறீர்களே, அமெரிக்காவில் இன்னும் “வாக்குச்சீட்டு” முறை தான் பின்பற்றப்படுகிறது. அப்படியென்றால் அதையே நாமும் இங்கு பின்பற்றலாம் என நமது பாரதத்தை பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறீர்களா?

EVM மூலம் வெற்றி பெற்று தான் நீங்களும் உங்கள் அரசும் இன்று அரியணையில் அமர்ந்திருக்கிறீர்கள், EVM வேண்டாம் என்றால், அதன் மூலம் பெற்ற உங்கள் வெற்றியையும் நிராகரித்து விடலாமா? தமிழக சட்டமன்றத்தில் நின்று கொண்டு, அமெரிக்கா, அயர்லாந்து, அண்டார்டிகா என்று அடித்து விட்டால், நீங்கள் அதிமேதாவி என்றாகி விடுமா?

உங்களுக்கு அரசியல் பற்றிய புரிதலும் இல்லை, அவை நாகரிகம் குறித்த மாண்பும் தெரியவில்லை என்பதால் தான், உங்கள் கட்சியைச் சேர்ந்த சபாநாயகரே நீங்கள் பேசும் பெரும்பாலான கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார். இந்த லட்சணத்தில் எங்கள் பிரதிநிதி குறித்து விரல் நீட்ட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல பொய்களை எல்லாம் அள்ளிவிட இது ஒன்றும் உங்கள் கட்சி மேடையல்ல, சட்டமன்றம்.

எனவே, தொகுதி மறுவரையறை குறித்து நீங்கள் அடித்து விட்ட அத்தனை பொய்களும், அந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நொடியே, தூள் தூளாகி விடும்! நாங்கள் மேலே கூறியவைகள் எல்லாம் உண்மை என நிரூபிக்கப்பட்டால், தோல்வியை ஒப்புக் கொண்டு அரசியலை விட்டே வெளியேறும் திராணி இருக்கிறதா உங்களுக்கு? பகிரங்க சவால் விடுகிறோம் அமைச்சரே! முடிந்தால் பதில் கூறுங்கள் என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

 

Tags: fake theoriesMLA BhojarajanTamil Nadu BJPtvkMinister Aadav Arjunadelimitation bill
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Next Post

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies