முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு - 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

தவெக அரசு ஆட்சியமைத்த பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆடைகள், காலணிகள், கார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 97 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, தைவான், ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டன.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில், ஆவிட் குழுமம் 7 ஆயிரம் கோடி ரூபாயிலும், ஜே.கே. டயர் நிறுவனம் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாயிலும், ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாயிலும், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயிலும் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மொத்தம் 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4 ஆயிரத்து 476 கோடி ரூபாய் மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், 2 ஆயிரத்து 676 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 777 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Tags: Ninety-seven MemorandumsChennaiguindyChief Minister Joseph Vijay'Vetri Tamil Nadu' Investors' Meet
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 40 பேர் காயம்!

Next Post

லார் கிப்பான் குரங்குடன் வீடியோ – நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies