திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது - தமிழிசை சௌந்தரராஜன்
Jul 21, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. இது சென்னையை 4 முனைகளில் இருந்து இணைப்பதற்கும் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

ஒரு கோடியே 26 இலட்சமாக இருக்கின்ற மக்கள் தொகை  வரும்காலங்களில் ஒரு கோடியே என்பதிலிருந்து 90 லட்சம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள் அப்போது சாலை போக்குவரத்து மிகவும் நெரிசல் ஆகிவிடும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர், சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரை பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்,

திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.. அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான்.. அவர் காந்தி பிறந்த நாள் என்பதற்காக அக்டோபர் இரண்டாம் தேதியில் மாநாடு நடத்தவில்லை அன்று நிறைந்த அமாவாசை என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார், நான் திருமாவளவன் நாகரீகமான தலைவர் என்று நினைத்திருந்தேன் ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது. அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன்.

தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன. உங்கள் கட்சி புதிய கட்சி உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும்.

இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் இருக்கிறது பெரியாரையும் கும்பிடுகிறார்கள். கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதாவது திமுக எதை செய்கிறதோ அதேபோலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது, சுருங்கச் சொன்னால் திமுகவை போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது

காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது. காங்கிரசை பொருத்தவரை காந்தியை விமர்சித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். சோனியா காந்தியையோ ராகுல் காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே துள்ளி குதிப்பார்கள் என தமிழிசை தெரிவித்தார்.

Tags: CongressVijayvckthirumavalavanTamilisai SewundararajanChennaibjpDMKgandhi
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

Next Post

உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

Related News

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies